உம்மால் அழைக்கப்பட்டு
Ummaal azhaikkappattu
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே
நடந்ததோ நடப்பதோ நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை என்னிடமிருந்து பிரிக்குமோ
முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே
எங்களுக்காக இயேசுவைகூட மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு மற்றவை எல்லாம் தந்தருள்வீர்