உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
Um Naamam Thenilum
உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
சொல்ல சொல்ல இனிக்குதைய்யா
அடோனாய் எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
தந்தையே ஏசுவே
ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை -4
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே
எல் எலியோன் உன்னதரே
இம்மானூவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் இயேசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
நியுமாவ் தூய ஆவியே
ஷெக்கீனா தேவ மகிமையே
துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்
எங்களின் தேற்றவாளானே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter