உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
Ummai Pugazhai Paaduvathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
பாடல்கள் வைத்தீர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் அது
எவ்வளவு உயர்ந்தது -2
நிலாவைப் பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைந்து விசாரித்து
நடத்த (நான்) எம்மாத்திரமையா
வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
அனைத்துப் படைப்புக்கள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்ப்படியச் செய்துள்ளீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter