உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
Ummai Nesikkiren Yesuve
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter