உனக்குள்ளே இருக்கின்ற
Unakkulle Irukkindra Un Yesu
உனக்குள்ளே இருக்கின்ற - உன்
இயேசு என்றும் பெரியவரே நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியம் செய்திடுவார்
நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter