உந்தன் பாதம் ஒன்றே போதும்
Undhan Paatham Ondre
உந்தன் பாதம் ஒன்றே போதும்
எந்தன் நேசர் இயேசுவே
உம்மையல்லால் வேறு எதுவும்
இந்த உலகில் எனக்கு வேண்டாம்
பாவியாய் நான் அலைந்தேனே
என்னைத் தேடி நீர் வந்தீரே
உந்தன் உதிரம் எனக்காக சிந்தி
என்னை மீட்டு இரட்சித்தீரே
அன்பைத் தேடி நான் அலைந்தேனே
எங்கும் நான் அதைக் காணவில்லை
உந்தன் அன்பை என் மேல் பொழிந்து
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்
துன்பம் நிறைந்த என் வாழ்விலே
உந்தன் சமூகம் ஒன்றே போதும்
கண்ணின் மணிபோல காக்கும்
உம்மைப் போல் யாருமில்லை
தனிமை என்னை வாட்டும் போது
உம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்
கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே
உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter