உம்மோடு இருக்கணுமே ஐயா
Ummodu Irukkanume Iyai
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே
வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே
ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter