• waytochurch.com logo
Song # 15767

உம்மைப் போல் நல் நேசருண்டோ

Ummai Pol Nal Nesarundo


உம்மைப் போல் நல் நேசருண்டோ
உன்னதர் நீர் அல்லவோ
கர்த்தரின் அன்பை நினைக்கும்போது
எந்தன் கவலைகள் மாறிடுதே

கல்வாரி சிலுவை நோக்கிடும் போது
கல்மனம் கலங்கிடுதே
பரிசுத்தர் போற்றும் பரம ராஜன்
என் பாவங்கள் நீக்கினாரே

நான் ஒரு கழுதை நீரோ என் தேவன்
நான் உம தடிமையல்லோ
வழி நடத்தும் என் அருமை நாதரே
வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன்

நேசரின் அன்பை அறிந்திடும் போது
நெஞ்சம் மகிழ்ந்திடுதே
இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை
என்றென்றும் துதித்திடுவேன்

என் இயேசு ராஜன் வருகையின் போது
எக்காளம் தொனித்திடுதே
நீதியில் நடத்தும் நல்ல மேய்ப்பனை
நிச்சயம் சேர்ந்திடுவேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com