உள்ளமெல்லாம் உருகுதையோ
Ullamellam Uruguthaiyaa
உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே உம்
சொந்தமாக்கிக் கொண்டீரே
எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்தி வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையை
மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளன்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்த்திட
தியாகராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter