உன்னதத்தின் ஆவியை
Unnathathin Aaviyai Unthan
உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
பெந்தெகொஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும்
எங்களை தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்
ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
வாழவும் ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter