உம்மையே நம்புவேன்
Ummaiyae Nambuvaen Ummaiyae
உம்மையே நம்புவேன், உம்மையே தேடுவேன்
உம்மை விசுவாசிப்பேன், உம் சித்தம் செய்திடுவேன்
நீரே என் கன்மலை,நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம், உம்மையே துதித்திடுவேன்
நீரே என் மறைவிடம்,நீரே என் புகலிடம்
நீரே என் அடைகலம்,உம்மையே போற்றிடுவேன்
நான் நம்பினோர் என்னை புறம்பே தள்ளிவிட்டாலும்
நான் நேசித்தார் என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாலும்
என் பெலனும், நம்பிக்கையும் நீரே
என் பாரங்கள் மன அழுத்தம் கொண்டு வந்தாலும்
தோல்வி என்றும் என்னை வாட்டி வதைத்தாலும்
என் பெலனும், நம்பிக்கையும் நீரே
என் கவலை கண்ணீர் தனிமையில் நிறுத்திவிட்டாலும்
என் எதிர்காலம் கேள்வி குறியாய் இருந்தாலும்
என் பெலனும், நம்பிக்கையும் நீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter