உகந்த காணிக்கையாய்
Uganda kanikkai
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா
தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்
வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்
அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter