உமக்கு மகிமை தருகிறோம்
Umakku Magimai Tharukirom
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter