Uyirulla Thiruppalai உயிருள்ள திருப்பலியாய்
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்து விட்டேன்
தகப்பனே தந்து விட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய்
உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும்
உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தனவாய் இருப்பதாக
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும் வரை