உருகாயோ நெஞ்சமே நீ
Uruguayo Nenjame Nee
உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறி
திருமேனி நையுதே
தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே
இயேசு பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குவார்
மூவுலகை தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்
வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றிகெட்டு
புறம்பாக்கினாரன்றோ
மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குருசேறினார்.

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter