உம்மைப் பார்க்க ஆசையே
Ummai Parka Aasaiye
உம்மைப் பார்க்க ஆசையே
தொட்டுப் பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே மகிமையே
அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு
அனலாக எரியச் செய்யுமே
மலை மீது என்னை கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ வேண்டும்
முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்
இரகசியம் பேச வேண்டும்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter