உயர்த்துவார் உயர்த்துவார்
Uyarthuvar Uyarthuvar Yesu
உயர்த்துவார் உயர்த்துவார்
இயேசு உன்னை உயர்த்துவார்
உன்னை என்றும் காண்பவர்
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்
உன்னை என்றும் நடத்துவார்
அல்லேலூயா
உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன்
சிங்கத்தின் மேலே நடப்பேன்
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன்
பெலனான தேவன் உண்டு
மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்
சமாதான தேவன் சீக்கிரம்
சாத்தானை நம் கால்களின் கீழே
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
சர்வ வல்லமை உடையவர்
பரிசுத்த தேவன் இவரே