உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
Ummai Nesikkiren En Yesuve
உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
என் ஆவி ஆத்துமா சரீரம்
உம் பாதத்தில் நான் படைக்கிறேன்
என்னை உந்தன் கையில் ஏற்று
மாற்றிடும் உம் பிள்ளையாய்
என் வாழ்வில் என்ன நடந்தாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
மரணத்தின் பாதை சென்றாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
என்னை கொன்று போட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
நன்மை செய்யாவிட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் காயம் அடைந்தவரே
உம்மை நேசிக்கிறேன்
என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே
உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மீண்டும் வருபவரே
உம்மை நேசிக்கிறேன்
என்னை உம்மோடு
சேர்த்துக் கொள்வீர்
உம்மை நேசிக்கிறேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter