உம்மாலே நான் ஒரு
Ummale Naan Oru
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன்
எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்
இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
அன்பே நீர் என்னுடைய
தெய்வம் என்றுமையா
உம்மைத் துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன்
உம் வசனம் ஆத்துமாவை
உயிர்பெறச் செய்யும்
பேதைகளை ஞானியாக
உயர்ந்திடச் செய்யும்
அதை பின்பற்றினால் எப்பொழுதும்
பெலன் பெற்றிடுவேன்
கன்மலையே உம்மில் நான்
அடைக்கலம் புகுந்தேன்
என் வழியை என்றென்றும்
செம்மைப்படுத்துகிறார்
இரட்சிப்பின் கேடகத்தால்
என்னைச் சூடுகிறார் அவர்
காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினாலே
நீடிய காலம் வாழ்ந்திடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter