உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு
Ummaithanae Naan
உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
அல்லேலூயா ஆராதனை (4)
நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர்
நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும்
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்
புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர்
துயரத்தின் ஆடையை நிக்கினீரே
துதிக்கச் செய்தீரையா

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter