உம்மை நான் பார்க்கனுமே
Ummai Naan Paarkanumae
உம்மை நான் பார்க்கனுமே
உம்மோடு பேசனுமே
உம் அருகில் இருக்கனுமே
உம் அன்பை நேசிக்கனுமே
தருகிறேன் என்னை -3 உமக்காகவே
என் நாவில் சொற்கள்
பிறவாத முன்னே
அதையெல்லாம் அறிந்தவரே
உம் சமூகத்தை விட்டு
நான் எங்கு போவேன்
என் ஆதாரம் நீர்தானே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவரே
என் எலும்புகள் கூட
உருவாகும் முன்னே
உம் கண்கள் என்னை கண்டதே
ஆபத்து நாளில் ஆதரவாயிருந்து
தூக்கி சுமந்தீரே
இரட்சணிய கன்மலையே
உயர்ந்த அடைக்கலமே
நீரே என் தஞ்சமே