உம்மை துதிப்பேன் நான்
Ummai Thuthipen Naan
உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்
அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்
நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே
என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே
எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter