உம்மைப்போல தெய்வம் இல்லை
Ummai Pola Theivam Illai
உம்மைப்போல தெய்வம் இல்லை
நீரில்லை என்றால் நானும் இல்லை
கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை
உம் அன்பிற்கு அளவே இல்லை
முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான்
தாயில்லை பிள்ளைப்போல அழுதேன் நான்
மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே
உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
எந்தன் பாதையை மறந்தேன் நான்
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உம்மில் ஜீவனை கண்டேன் நான்
வழிகாட்டும் தெய்வமே
என்னைக் காக்கும் கர்த்தரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter