உம்மை என்றும் துதிப்பேன்
Ummai Endrum Thuthipen
உம்மை என்றும் துதிப்பேன்
உள்ளளவும் துதிப்பேன்
ஆவியோடும் உண்மையோடும்
உம்மை துதிப்பேன்
கெம்பீர சத்தத்தோடும்
கைத்தாள ஓசையோடும்
ஆரவாரத்தோடும்மை துதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்
இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்
எனது நிழலானீர் எனது துணையானீர்
பாவம் அணுகா வாழ்வை தந்தீர்
பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்
எனது வாழ்வானீர் எனது பெலனானீர்
சாதிக்க செய்தீர் உமக்காகத்தானே
சதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானே
எனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர்