Unnatha Devan Ennodu உன்னத தேவன் என்னோடு இருக்க
உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன்
கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார்
சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்
கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்