உன்னத தேவனுக்கே மகிமை
Unnatha Devanukkae
உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
கதிரொளியாய் ஜெனித்தார்
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே
மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்
தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்
வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்
தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter