உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்
Ummai Paadamal
உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்
உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்
உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே
உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியது
அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
உங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்த
உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது
என் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே
என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே
எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து
ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து
வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே
வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter