• waytochurch.com logo
Song # 15829

உம்மை உயர்த்திடுவேன்

Malae Malae


உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)
எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே

கன்மலை மேல் நிறுத்தி
என் அடிகள் பெலப்படுத்தி
தேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்
அநேகர் அதை கண்டு
பயந்து உம்மை நம்பி
என்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன்

மேலான கிருபைகள்
மேலான தரிசனங்கள்
மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்
பூமியிலே கட்டவிழ்ப்பேன்
பரலோகத்தில் எடுப்பேன்
மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன்

அம்புகள் பறந்தாலும்
கொள்ளை நோய் நடந்தாலும்
சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையே
உம்மிலே வாஞ்சையாய் நான்
உம் நாமம் அறிந்ததினால்
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து விட்டீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்ததினால் நன்றி சொல்வேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com