உங்க நன்மையால் திருப்தியாக
Unga Nanmaiyal
உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்
உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்
தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே
கூப்பிடும் போது எனக்கு துணையாவீரே
குப்பையிலிருந்து எளியவனை தூக்கி
பிரபுக்களோடு உட்கார வைத்தீர்
ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கி
கன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்
நல்லவரே நீதியின் சூரியனே
நித்தியமானவரே நிரந்தரம் நீர்தானே
ஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே
தேவைகள் வரும்போது என்னோடு வருவீரே - நன்மையால்
வனாந்திரங்கள் வயல்வெளியாகும்
வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்
சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்
செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்
காற்றை கவனித்தால் விதைத்திட முடியாது
மேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது
மலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது
பர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது - நன்மையால்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter