உம் பரிசுத்த ஸ்தலத்தில்
Um Parisudha Sthalathil
உம் பரிசுத்த ஸ்தலத்தில்
உம்மைப் பார்க்க
ஆசையாய் இருக்கிறேனே
உம் வல்லமையை மகிமையை பார்க்க
இன்னும் கிருபை தாருமே
நீர் பரிசுத்தர் சுத்தர் சுத்தர் சுத்தர் பரிசுத்தர்
உன் அன்பின் ஆழம் அகலம் அறிய
என் இதயத்தைத் திறக்க வேண்டுமே
பரிசுத்தமான உம் முகத்தை பார்க்க
இன்னும் என்னை மாற்ற வேண்டுமே
நீரே தூயர் தூயர் தூயர் தூயாதி தூயர்
உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தை
திரும்பவும் எனக்குத் தந்திடும்
உற்சாகமான ஆவியில்
என்னை தாங்கிட அருள் செய்திடும்
நீர் என் தகப்பர் தகப்பர் தகப்பர்
தகப்பர் என் தகப்பர்