உந்தன் ஆவி எந்தன்
Unthan Aavi Enthan
உந்தன் ஆவி எந்தன்
உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன்
நாமம் பாட வேண்டும்
உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்
பாவமான சுபாவம் எல்லாம்
நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும்
நடத்த வேண்டும்
ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்
வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்
ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter