• waytochurch.com logo
Song # 15836

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

Uthavathavan Endrum


உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
தள்ளியதே உலகம்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
என்னைத் தள்ளாதவர் என் இயேசு

பொய்யான உலகினிலே
மெய் தெய்வம் தேடி வந்தார்
என் வாழ்க்கை மாற்றிடவே
என் சாபம் ஏற்றாரே

தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல் சுமந்தாரே
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
என்னை தினம் சுமந்து சென்றார்

இரத்தத்தில் கிடந்த என்னை
பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
பிழைத்திரு என்று சொல்லி
தூக்கியெடுத்தீரையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com