உன்னை வாலாக்காமல்
Unnai Valakamal
உன்னை வாலாக்காமல்
இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்
செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே
சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்
ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை
போல் உன்னை மாற்றிடுவார்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter