Vazhi Nadathum Valla Devan வழி நடத்தும் வல்ல தேவன்
வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே
பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே - பரமானந்தத்தோடே
செல்வோம் - பரமன் நாட்டிற்கே
இயேசு பரன் தம் வீட்டினிற்கே
போகும் வழியைக் காட்டி நல்ல
போதனை செய்வார் - ஏகும் சுத்தர்
மீது கண்கள் இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்
அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே - சொந்தமான
தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே
இயேசு துணையாய் நிற்பாரே
வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் - பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்
காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் - பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே
அன்றன்றுள்ள தேவை தந்து
ஆதரிப்பாரே - என்றென்றும்
துதிகனமும் மகிமையவர்க்கே
இயேசு மகிபனாமவர்க்கே