வறண்ட நிலம் தண்ணீருக்காய்
Varandanilam thanneerukkaai
வறண்ட நிலம் தண்ணீருக்காய்
ஏங்குவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறுவது போல
என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
மனிதர் குரல் கேட்டது போதும்
உம் குரல் கேட்கணுமே
உந்தன் மகிமை காண வேண்டுமே
வாரும் உம் பிரசன்னம்
வேண்டும் வேண்டும்
தேற்றிடும் உம் சமுகம்
வேண்டும் வேண்டும்
இந்த உலகத்திலே மனிதர்கள்
கேட்கும் கேள்விகள்
உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்
அது கேட்டிடும் வேளையிலே
என் உள்ளம் நொறுங்கினதே
இரவும் பகலும் என் கண்ணீரே
என் போஜனம்
உம்மை நோக்கிக் காத்திருப்பேன்
உம்மை இன்னமும் துதித்திடுவேன்
உமது மகிமையை இந்த உலகம் அறிந்திட
வேண்டும் வேண்டும்