விண்ணப்பத்தைக் கேட்பவரே
Vinnapathai Ketpavare
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே