வாருமையா போதகரே
Vaarumaiyah Pothakarae
வாருமையா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியிலே
சிறியவராம் எங்களிடம்
ஒளி மங்கி இருளாச்சே
உத்தமரே வாருமையா
களித்திரவு காத்திருப்போம்
காருண்யரே வாருமையா
நானிருப்பேன் நடுவிலென்றீர்
நாதா உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் புரிவீர்
மனக்கண்கள் மறைக்குதையோ
மன்னவனார் சமூகமதை
இமைப்பொழுதில் மறந்தீரே
ஏகுபரா வாருமையா
உந்தன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவீர்
பந்தமற பரிகரித்தே
பாக்கிய மளித்தெம்மை ஆண்டருள்வீர்