Vanathi Vanavar Nam வானாதி வானவர் நம் இயேசுவை
வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்
வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்
பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார்
பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே