• waytochurch.com logo
Song # 15868

வல்லமையின் ஆவியானவர்

Vallamaiyin Aaviyanaar


வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்

பவர் ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை

கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும் நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்

உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் நான்
எப்போதும் சுவை தருவேன்

கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல் பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்

தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார் தீயோன்
என்னை தீண்டுவதில்லை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com