• waytochurch.com logo
Song # 15872

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

Vizukuthu Vizukuthu Eriko


விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே - துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்

அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் - நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com