• waytochurch.com logo
Song # 15879

Vazhi Sonnavar Vazhiyumanar வழி சொன்னவர் வழியுமானவர்


வழி சொன்னவர் வழியுமானவர்
வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையுமானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனிவர் - இயேசு

இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்

இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த
ஆண்டவர் - இயேசுவே கர்த்தனாம்
கர்த்தாதி கர்த்தனாம் - இயேசுவே
ராஜனாம் ராஜாதி ராஜானாம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com