என் விண்ணப்பத்தை கேட்டீரையா
En vinnapathai
என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீர் கண்டீரையா
எனக்குதவி செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட
ஏல் ஒலாம் தேவனே
சதாகாலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே
வனாந்திரமான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்
துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உம் கிருபை
மரண இருளில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter