வல்லமையில் உமது நாமம் பெரியது
Vallamaiyil Umathu Naamam
வல்லமையில் உமது நாமம் பெரியது
பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
உமக்கு ஒப்பானவர் யாருண்டு
உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு
ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா
அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்
அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே
கருவிலே எங்களை தாங்கினீர்
இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்
ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்