• waytochurch.com logo
Song # 15899

வைகறையில் உமக்காக

Vaigaraiyil Umakkaaga


வைகறையில் உமக்காக
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்

உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்

ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா

படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com