Visuvaasathinaal Neethimaan விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ