• waytochurch.com logo
Song # 15904

வானோர் பூவோர் கொண்டாட

Vaanor Poovor Kondada


வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

தீனதயாளன் திருமறைநூலன்
திரிபுவனங்களாள் செங்கோலன்
ஞானசு சீலன் நரரனுகூலன்
நடுவுடவே வருபூபாலன்

அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்
அருலமலர்க்கா காவலை யழித்தார்
நிலைதிரை கிழித்தார் தடைச்சுவரிடித்தார்
நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்
தேடற் கரியதோர் காட்சிவைத்தார்
மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்
மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார்

அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
வானானந்தமே மனங்கொண்டார்

மகதலனாளு மதி சூசன்னாளும்
மயங்கியழுத யோ வன்னாளும்
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே

எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி

மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தன்ரே

கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
ஒலிவை மலைமேல் திரள்பேர் பார்த்தார்.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com