வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
Vinai Suzhathintha
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா
கனகாபி ஷேகனே அவனியர்க் கொளிர் பிர
காசனே பவநாசனே ஸ்வாமி
சென்ற பகல் முழுவதும் என்னைக் கண் பார்த்தாய்
செய் கருமங்கலில் கருணைகள் பூத்தாய்
பொன்ற தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்
பொல்லாப் பேயின் மோசம்
நின்றெனைக் காத்தாய்
சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே
ஜோதிநட்சத்திரம் எழுந்தன வானே
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன் அடியேனும் பள்ளி கொள்வேனே
ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்
பட்சம் வைத்தாள்வையேல் அதுவே ஆனந்தம்
இன்றைப் பொழுதில் நான் செய்
பாவங்கள் தீராய்
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்
உயிரை எடுப்பையேல் உன் முத்தி தாராய்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter