வான நகரதின் மேன்மையென
Vaana Nagarathin Menmaiyena
வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்
பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான
அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம்
அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரிடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல்
நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்ங்கள் எல்லாரும் தூதர் நல்லோரும்
ஒய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள