வற்றாத நீரூற்று போலிருப்பாய்
Vatraadha Neeruttru Poliruppai
வற்றாத நீரூற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
1. வாய்க்கால்கள் ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
2. ஓடும் நதி நீ
பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
3. பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள்
4. பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார்