இயேசு ராஜா எனை ஆளும் நேசா
Yesu Raja Ennai Aaalum Neasa
1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே 
முனுவேலே மாமறை நூலே 
தேவ செங்கோலே 
இங்கெனின் மேலே அன்பு செய் 
2. தாவீ தரசன் மைந்தா 
நின் சரணம் சரணம் எந்தா!
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்!
3. ஐயா என் மனம் ஆற்றி 
உன தடிமை எந்தனை தேற்றி 
குணமாக்கி வினை நீக்கி 
கைதூக்கி மெய்ப் பாக்கியம் கொடு 
4. சுத்த திருத்துவ வஸ்துவே 
சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே 
பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித் 
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்!
5. மங்களம் ஈசாவே வளம் மிகும் 
சங்கையின் ராசாவே - நரர் 
வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே! 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter